காதல் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் குறித்து இப்படத்தின் இயக்குனர் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் முன்னணி நடிகர் பரத் மற்றும் சந்தியா நடிப்பில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான காதல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. ஆனால் இந்தப் படத்தின் நெகட்டிவ் கிளைமாக்ஸை சிலர் நிராகரித்தனர் என இப்படத்தின் இயக்குனர் சக்திவேல் அப்போது கூறியிருந்தார்.
இந்நிலையில் அவர் தற்போது காதல் படம் குறித்த மேலும் சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அதன்படி இப்படத்தில் முதலில் நடிக்க நடிகர் தனுஷை அணுகியதாகவும் ஆனால் அப்போது அவர் சுள்ளான், ட்ரீம்ஸ் உள்ளிட்ட படங்களில் பிஸியாக இருந்ததால் காதல் படத்தில் நடிக்க நிராகரித்து விட்டார் என்று கூறியுள்ளார்.
மேலும் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வரலட்சுமி சரத்குமார் தான் முதலில் தேர்வு செய்யப்பட்டார் என்றும் அவர் இப்படத்தில் நடிக்க மறுத்ததால் பின் சந்தியா ஒப்பந்தம் ஆனார் என்றும் கூறியுள்ளார்.