தனுஷின் 3 படத்தில் முதலில் அமலாபால் தான் நடிக்க இருந்ததாக தெரியவந்துள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான 3 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது. குறிப்பாக இப்படங்களில் இடம்பெற்றிருந்த ஒவ்வொரு பாடலும் பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்றது.
மேலும் இத்திரைப்படத்தை தனுஷின் மனைவியும், தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா தனுஷ் தான் இயக்கியிருந்தார். இப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆனால் இப்படத்தில் முதல் முறையாக தனுஷுக்கு ஜோடியாக அமலாபால் தான் நடிக்க இருந்ததாக கூறப்படுகிறது. நடிகை அமலாபாலுக்கு அப்போது கால்ஷீட் கிடைக்காததால் அவர் இப்படத்தில் நடிக்க முடியாமல் போயுள்ளது.