வாஷிங்டன் மற்றும் கிரெம்ளின் நாளை அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் காணொளி காட்சி மூலம் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று தெரிவித்துள்ளது.
கடந்த 1991-ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியம் துண்டுகளாக உடைந்த பிறகு ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் இருந்த உக்ரைன் விடுதலை பெற்று தனிநாடாக மாறியது. இதையடுத்து உக்ரைனின் கிரீமியா தீபகற்பம் கடந்த 2014-ஆம் ஆண்டில் மீண்டும் ரஷ்யாவின் கைவசம் வந்தது. அதன் பிறகு அமெரிக்கா உக்ரைனை நோட்டா ராணுவ கூட்டமைப்பில் சேர்க்க முயற்சித்தது. இந்த நடவடிக்கைக்கு ரஷ்யா கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் ரஷ்யா சுமார் 1.75 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் மீது படையெடுப்பதற்காக எல்லை பகுதியில் நிறுத்தி வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் வருகின்ற 7-ஆம் தேதி காணொளி காட்சியில் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பேச்சுவார்த்தையின் போது ரஷ்ய அதிபர் புடின் உக்ரைன் மீது தங்கள் நாடு படை எடுக்காமல் தடுப்பதற்கான விவாதம் ஒன்றையும் நடத்த உள்ளதாக கூறியுள்ளார்.