Categories
உலக செய்திகள்

கூட்டத்தில் துப்பாக்கியுடன் நுழைந்தவர்…. மடக்கி பிடித்த போலீஸ் அதிகாரிகள்…. கண்காணிப்பு பணிகள் தீவிரம்….!!

நாடாளுமன்றம் வளாகத்தின் முன்பாக நடந்த போராட்டத்தில் துப்பாக்கியுடன் நுழைந்தவரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் நகரில் கடந்த ஜனவரி மாதம் 6 ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். இதற்காக அவருக்கு நாடாளுமன்ற அங்கீகரிப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனால் தோல்வியடைந்த டிரம்ப் அவர்களின் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் முன்பாக கலவரம் செய்தனர். இந்த கலவரத்தில் பொதுமக்கள் பலர் உயிரிழந்தனர். இந்த சம்பவமானது அமெரிக்கா நாடாளுமன்ற வரலாற்றில் பெரும் கரையாக படிந்தது. இந்த கலவரத்தில் சம்பந்தப்பட்ட சுமார் 600 பேரை போலீஸ் அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு டிரம்ப் ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் வாஷிங்டன் நாடாளுமன்றத்திற்கு அருகிலுள்ள கேப்பிடல்ஹில் பகுதியில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக போராட்டத்தில் ஒருவர் கை துப்பாக்கியுடன் இருந்ததால் அவரை போலீஸ் அதிகாரிகள் மடக்கி பிடித்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து 3 பேரை பல்வேறு வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

US Capitol attack – News, Research and Analysis – The Conversation – page 1

இந்தப் போராட்டத்தினால் கேப்பிட்டல்ஹில் பகுதியில் உள்ள யூனியன் சதுக்கம் இடத்தில் 100க்கும் மேலான போலீஸ் அதிகாரிகள் குவிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் ஹெலிகாப்டர் மூலமாகவும்  கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக இந்தப் போராட்டத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் லுக் அஹெட் அமெரிக்கா என்னும் டிரம்பின் ஆதரவு அமைப்பு செய்துள்ளது.

Categories

Tech |