இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா சிறப்பாக செயல்படுகிறார், என்று பாகிஸ்தான் முன்னாள் வீரரான சல்மான் பட் புகழ்ந்து பேசியுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சல்மான் பட் , இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ராவை பாராட்டியுள்ளார். இவர் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்களான வாசிம் அக்ரம், வக்கார் யூனுஸ் வீரர்களுக்கு இணையாக, பும்ரா செயல்படுகிறார் என்று புகழ்ந்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “இந்திய அணியின் முக்கியமான பவுலராக பும்ரா திகழ்ந்து வருகிறார். இவர் இந்திய அணிக்கு கிடைத்த பொக்கிஷமாகும். அவரை சரியான விதத்தில் பயன்படுத்த வேண்டும். ரோஹித் சர்மா பும்ராவை ,நன்றாக புரிந்துகொண்டு சரியான அவரை பயன்படுத்துகிறார். அவருக்கு முதலில் சில ஓவர்களை கொடுத்துவிட்டு பின், இறுதியில் மீண்டும் பவுலிங் செய்ய அழைக்கிறான். ஏனெனில் இறுதியில் பும்ராவின் பந்துவீச்சீல் ரன்களை குறிப்பது சாதாரணமான விஷயம் கிடையாது.
ஒரு காலத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் ஜாம்பவான்களான வாசிம் அக்ரம் ,வக்கார் யூனுஸ் இருவரும் அணிக்கு எவ்வளவு முக்கியமான வீரர்களாக திகழ்ந்தார்களோ , அதற்கு இணையாக தற்போது இந்திய அணியில் பும்ரா திகழ்ந்து வருகிறார். அனைத்து விதமான பந்துகளையும் வீசக்கூடிய திறமை வாய்ந்தவராக பும்ரா திகழ்கிறார்”. மேலும் பேசிய அவர் ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட் சிறப்பாக செயல்பட்டு உள்ளார். இதனால் அவர் எதிர்கால இந்திய அணியின் கேப்டனாகவும் இருப்பார். தற்போது கேப்டனாக இருக்கும் விராட் கோலி 8 முதல் 9 வருடங்கள் வரை கேப்டனாக செயல்படுவார். அதுபோல ரோஹித் சர்மா மற்றும் ரஹானே இருவரும் கேப்டன் பதவியில் சிறப்பாக செயல்பட்டு இருந்தனர் “, என்று சல்மான் பட் கூறினார் .