Categories
கரூர் மாவட்ட செய்திகள்

சாலையோரம் கொட்டப்படும் கழிவுகள்…. விபத்து ஏற்படும் ஆபத்து…. வாகன ஓட்டிகள் கோரிக்கை…!!

சாலையோரம் கழிவுகள் கொட்டப்படுவதால் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம் நொய்யல் அருகே நடையனூரில் டீக் கடைகள் மற்றும் காய்கறி கடைகள் உள்ளிட்ட கடைகள் இருக்கின்றன. மேலும் இந்த பகுதியில் திருமண மண்டபமும் இருக்கிறது. இந்நிலையில் வீடுகளில் சேரும் குப்பைகள், கடைகளில் சேரும் கழிவு பொருட்கள், திருமண மண்டபத்தில் மீதமாகும் உணவுகள் மற்றும் எச்சில் இலைகள் ஆகியவை இச்சாலையோரங்களில் கொட்டப்படுகிறது.

இதனால் சாலையோரம் கொட்டப்படும் உணவுகளை தின்பதற்காக நாய்கள் கூட்டமாக வருகின்றன. அப்போது நாய்களுக்கு ஏற்படும் சண்டையினால் சாலைக்கு வந்து விடுகின்றன. இதனால், அந்த வழியாக இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். மேலும் தற்போது பெய்து வரும் மழையால் அங்கு தேங்கி கிடக்கும் கழிவு பொருட்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது.
நாளடைவில் அந்த மழைநீரில் புழுக்களும்  உற்பத்தியாகிறது. இதனால், அந்த பகுதியில் சுகாதார கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே சாலைபகுதியில் கொட்டப்பட்டுள்ள கழிவுபொருட்களை நீக்கவும், இனிமேல் இந்த இடத்தில் குப்பைகள் மற்றும் கழிவு பொருட்களை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |