சுகாதார பணியாளர்களுக்கென பாதுகாப்பில்லாத பிபிஇ என்னும் கிட்டை இங்கிலாந்து அரசாங்கம் சுமார் 2.1 பில்லியன் பவுண்டுகள் மதிப்பில் மக்களுடைய வரிப் பணத்தில் இருந்து வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து அரசாங்கம் கொரோனா தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க சுமார் 372 பில்லியன் பவுண்ட்டுகளை செலவழித்துள்ளது. இதில் ஒரு பாதியை அதாவது சுமார் 2.1 பில்லியன் பவுண்டுகளை சுகாதாரப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வாங்குவதற்காக செலவழித்துள்ளது.
ஆனால் இந்த பிபிஇ கிட் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பானது அல்ல என்று the common public Accounts Committee அறிவித்துள்ளது. இதுகுறித்து பொது செலவினங்களை கண்காணிக்கும் குழு முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது சுகாதாரத்துறை கணக்கிட்ட எண்ணிக்கையை விட 5 மடங்கு அதிகமாக பயன்படுத்த முடியாமல் போன பாதுகாப்பு உபகரணங்களின் விலை அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்கள்.