Categories
உலக செய்திகள்

அதிபர் கிம் மணிக்கட்டை பாருங்க… அறுவை சிகிச்சை நடந்ததா?… ஆனாலும் கெத்தா தம் அடிக்கிறாரு… குழப்பத்தில் உலக நாடுகள்!

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னின் கையில் கை மணிக்கட்டில் இருக்கும் அடையாளத்தால் அவர் அறுவை சிகிச்சை செய்திருக்கக்கூடும் என கருதுகின்றனர்

வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் சில தினங்களாக யார் கண்களுக்கும் புலப்படாமல் இருந்ததால் அவர் உடல் நிலை பாதிக்கப்பட்டதாகவும் இறந்துவிட்டதாகவும் வதந்திகள் பரவி வந்தன. இந்நிலையில் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நேற்று உரத்தொழிற்சாலை திறப்பு விழாவிற்கு கிம் ஜாங் உன் வந்துள்ளார். இதுகுறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வடகொரிய அரசு ஊடகங்கள் வெளியிட்டுள்ளது. வெளியிடப்பட்ட வீடியோவில் அதிக எடையுடன் கிம் அவதிப்படுவது அப்பட்டமாக தெரிந்தது. வெகுதூரம் நடக்க முடியாத காரணத்தினால் மின்சார கார் மூலம் அதிகாரிகளுடன் பேசியபடி தொழிற்சாலையை சுற்றிப் பார்த்துள்ளார் தலைவர் கிம் ஜாங் உன்.

வெளியான வீடியோ மற்றும் புகைப்படங்களை பார்த்த மருத்துவ வல்லுநர்கள் பகுப்பாய்வு செய்து பார்த்தபொழுது கிம் ஜாங் உன் கை மணிக்கட்டில் சிகிச்சை எடுத்தற்கான  அடையாளம் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். கையில் இருக்கும் அடையாளத்தை வைத்து அறுவை சிகிச்சை செய்து இருக்கலாம் என  மருத்துவ வல்லுநர்கள் கருதுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் கடைசியாக கலந்து கொண்ட கட்சி கூட்டத்தின்போது அவரது கையில் எந்த அடையாளமும் இல்லை. ஆனால் இப்போது புதிதாக இந்த அடையாளம் இருக்கின்றது.

எனவே மருத்துவர்கள் கிம் ஜாங் உன் அறுவை சிகிச்சை செய்து இருக்கலாம் என எண்ணுகின்றனர். கிம்முக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானதால் இந்த ஊசி போட்ட அடையாளத்தை பார்க்கும்பொழுது இவருக்கு உடலில்  ஏதோ ஒரு பிரச்சினை இருப்பது மட்டும் தெளிவாக தெரிகின்றது. ஆனால் தொழிற்சாலை திறப்பு விழாவின் போது கிம் ஜாங் உன் சிகரெட் பிடித்தபடி இருந்துள்ளார். இதனால் உடல்நிலை சரி இல்லாமல் இருந்திருந்தால் புகைப்பிடித்து இருக்க மாட்டாரே என்று சந்தேகமும் மருத்துவர்கள் மத்தியில் எழுந்துள்ளது

Categories

Tech |