Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சிறுவர்களா இதை செஞ்சாங்க…? கோவிலுக்குள் நடந்த கோர சம்பவம்… சென்னையில் பரபரப்பு…!!

கோவில் உண்டியலை உடைத்து திருட முயற்சி செய்த 4 சிறுவர்கள் காவலாளியை அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள ஐஸ்அவுஸ் பகுதியில் பிரபல தீர்த்தபாலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக பாபு என்பவர் இந்த பழமையான கோவிலின் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் முகமூடி அணிந்த 4 மர்ம நபர்கள் கோவிலுக்குள் நுழைந்து உண்டியலை உடைத்து கொண்டிருந்தனர். இதனை அடுத்து உண்டியல் உடைக்கும் சத்தத்தை கேட்டதும் காவலாளியான பாபு நான்கு பேரையும் பிடிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அவர்கள் இரும்பு ராடால் பாபுவை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதற்கிடையில் கொள்ளையர்கள் வந்ததை அறிந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து கோவிலுக்கு விரைந்து சென்றுள்ளனர்.

இதனையடுத்து காவல்துறையினர் வருவதை அறிந்த கொள்ளையர்கள் பணத்தை எடுக்காமல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அதன்பின் பொதுமக்கள் படுகாயமடைந்த பாபுவை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பாபு பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் 14, 16, 15, 17 வயது சிறுவர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் அந்த நான்கு சிறுவர்களையும் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

Categories

Tech |