நடப்பு வருடத்தில் 36,234 வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட இருப்பதால் பொதுமக்கள் சமூக பங்களிப்பு தொகை செலுத்த ஆட்சியர் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, விழுப்புரம் மாவட்டத்தில் சென்ற 2020 வருடம் முதல் ஜல் ஜீவன் மிஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. கிராம பகுதிகளில் இருக்கும் அனைத்து வீடுகளுக்கும் செயல்படக்கூடிய இணைப்பு வழங்கி ஒவ்வொரு நபருக்கும் 55 லிட்டர் தரமான குடிநீர் வினியோகிப்பது இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.
இந்த நிலையில் நடப்பு 2022-23 ஆண்டில் 10 ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 84 ஊராட்சிகளில் மொத்தம் 36 ஆயிரத்து 234 செயல்படக்கூடிய வீட்டு குடிநீர் இணைப்பு பணிகளை 30.23 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டிருக்கின்றது. ஆகையால் சமூக பங்களிப்பு தொகை வசூல் செய்ய பொதுமக்களை அணுகும் ஊராட்சி செயலாளர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு ஒத்துழைத்து சமூக பங்களிப்பு தொகையை கால தாமதம் இல்லாமல் உடனே சம்பந்தப்பட்ட ஊராட்சிகளில் வசிக்கும் மக்கள் செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.