Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஏரியில் குதுகலம்….. சேற்றில் சிக்கிய கால்…. நீரில் மூழ்கி தொழிலாளி மரணம்…. சென்னை அருகே சோகம்…!!

சென்னை அருகே நண்பருடன் குளிக்கச் சென்ற தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆவடி பகுதியை அடுத்த அண்ணனுர் பள்ளிக்கூட ஏரியாவில் வசித்து வருபவர் வந்தவர் யுவராஜ். இவர் மனைவி பார்வதி. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். மூன்று பேருக்கும் திருமணமாகி அவரவர் கணவன் வீட்டில் வசித்து வருகின்றனர். யுவராஜ் அயப்பாக்கம் பகுதியில் இஸ்திரி கடை வைத்து நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் இவர் தனது நண்பர் பிரபாகரன் என்பவருடன் அயப்பாக்கம் ஏரிக்கு குளிக்க சென்றுள்ளார். அங்கு ஆழமான பகுதியில் சேற்றில் சிக்கி மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காவல்நிலையத்திலும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் பிரபாகரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |