Categories
சென்னை மாநில செய்திகள் வேலூர்

மாலை அலங்காரங்களுடன் புறப்பட்டது தண்ணீர் எக்ஸ்பிரஸ்…!!

 ஜோலார்பேட்டையிலிருந்து  50 வேகனில்  தண்ணீர்  நிரப்பப்பட்ட   ரயில் மாலை அலங்காரங்களுடன்  சென்னைக்கு புறப்பட்டது.

சென்னையில் ஏற்பட்டுள்ள தண்ணீர்  தட்டுப்பாட்டை போக்கும் விதமாக  ஜோலார்பேட்டையிலிருந்து    ரயில் மூலம் தண்ணீர்  கொண்டு செல்ல  ரூ.65 கோடி நிதி ஒதுக்கப்பட்டு  அதற்கான பணிகள் விரைவாக  நடைபெற்று முடிந்தது. பணிகள் மற்றும் சோதனைகள் முடிவடைந்த நிலையில், 50 வேகனில்  தலா 54,000 லிட்டர் என மொத்தம் 27 லட்சம் லிட்டர் குடிநீர்  நிரப்பும் பணிகள்  நடைபெற்றன.

இதையடுத்து குடிநீர் முழுவதும் நிரப்பப்பட்டதும், ஜோலார்பேட்டையிலிருந்து  அலங்காரங்களுடன்  ரயில் புறப்பட தொடங்கியது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் மகேஸ்வரன் கொடி அசைத்து  ரயிலை வழியனுப்பி வைத்தார்.  ஜோலார்பேட்டையிலிருந்து புறப்பட்ட ரயில் மதியம் 1 மணிக்கு சென்னை ,வில்லிவாக்கம் ரயில் நிலையத்திற்கு சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  ரயிலில் வரும் குடிநீரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளோடு வரவேற்று, சென்னை மக்களுக்கு குடிநீரை விநியோகம் செய்ய  உள்ளார்.

Categories

Tech |