Categories
மாநில செய்திகள்

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறப்பு!

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையில் இருந்து 8 கண் மதகு வழியாக முதற்கட்டமாக 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 90 நாட்கள் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ள நிலையில் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரானது நேற்று பிற்பகல் திருச்சி மாவட்டம் முக்கொம்பை வந்தடைந்துள்ளது.

முன்னதாக ஜூன் 16ம் தேதி பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் இன்று கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனை விவசாயிகள் மலர் மற்றும் நெல் மணிகள் தூவி வரவேற்றனர். அமைச்சர்கள் காமராஜ், துரைக்கண்ணு, ஓ.எஸ்.மணியன், வைத்தியலிங்கம் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

வரக்கூடிய தண்ணீர் அளவை பொறுத்து தண்ணீர் திறக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. கொள்ளிடம் 500 கனஅடி, கல்லணை கால்வாய் இருந்து 500 கனஅடி, காவேரியில் இருந்து 500 கனஅடி தண்ணீரும் திறக்கப்படும் என தகவல் அளித்துள்ளனர். இதனால் தஞ்சை, திருவாரூர், நெல்லை, புதுக்கோட்டை ஆகிய டெல்டா மாவட்டங்களில் உள்ள 3.5 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2,002 கன அடியில் இருந்து 2,210 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டுர் அணையின் நீர்மட்டம் 99.64 அடியாக குறைந்துள்ளது. 308 நாட்களுக்கு பிறகு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு கீழ் சரிந்த‌து. அணையின் நீர் இருப்பு 64.3 டிஎம்சியாகவும் உள்ளது. நீர்வரத்து – 2,210 கனஅடியாகவும் உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு 10,000 கன அடியாக உள்ளது.

Categories

Tech |