மதுரையில் உள்ள உசிலம்பட்டி அருகே இருக்கும் சமத்துவபுரம் பெட்ரோல் பங்கில் தண்ணீர் கலந்து பெட்ரோல் டீசல் விற்பதாக புகார் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 21 நாள் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி கிடக்கின்றனர்.வேலை இழந்து வீட்டில் முடங்கி கிடப்பதால் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டாலும் கூட கொரோனா வைரஸ் விரட்டி அடிப்பதற்கு சமூக விலகல் அவசியம் என்பதை உணர்ந்து தங்களுக்கு ஏற்படுள்ள பொருளாதார கஷ்டங்களை சமாளிக்கின்றனர்.
மக்கள் கையில் பணமின்றி கஷ்டப்பட்டு வரும் இந்த நிலையிலும்கூட சில இடங்களில் மனிதாபிமானமின்றி சிலர் முறைகேடு செய்வது கோபம் கொள்ளாதவர்களையும் கூட ஆத்திரத்தின் உச்சிக்கே கொண்டு செல்கின்றது. அப்படி ஒரு நிகழ்வு மதுரையில் நடந்து பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
மதுரையில் உள்ள உசிலம்பட்டி அருகே இருக்கும் சமத்துவபுரம் பெட்ரோல் பங்கில் தண்ணீர் கலந்து பெட்ரோல் டீசல் விற்பதாக சொல்லப்படுகிறது. இதனால் 20க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பழுதானதால் வாகன ஓட்டிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொதுமக்கள் தங்கள் கையில் இருக்கும் காசை மிகவும் சிக்கனமாக பயன்படுத்தும், இக்கட்டான நிலையில் வாழ்ந்து வரும் இந்த நிலையில் கூட சிலர் சுயநலத்திற்காக முறைகேடு செய்து மக்களிடமுள்ள பணத்தை ஏமாற்றி புடுங்கும் இந்த செயல் அனைவரையும் ஆத்திரம் அடையவைத்துள்ளது.