ஆப்கானிஸ்தானின் தலைநகரில் பல வருடங்களாக நடந்த மோதல், மோசமான நீர் மேலாண்மை மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றின் காரணமாக தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் தலைநகரில் அதிகாரிகள் பலரும் தண்ணீர் பற்றாக்குறை ஒவ்வொரு நாளும் தீவிரமடைந்து வருவதாக தெரிவித்துள்ளனர். இதற்கிடையே காபூலின் மேயர் ஹம்துல்லா நோமானி ஆப்கானிஸ்தானின் தலைநகரம் தண்ணீர் இல்லாமல் வறண்டு போகும் நிலையும் உள்ளதாக கூறியுள்ளார். மேலும் நோமானி குடிநீர் வழங்கும் நிறுவனங்களுடன் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இருப்பினும் தொலைதூர பகுதியிலிருந்து காபூலுக்கு அதிகாரிகள் பலரும் அதிக அளவில் தண்ணீரை எடுத்து வந்துள்ளனர். இந்த நிலையில் காபூலில் உள்ள மசூதி ஒன்றில் இருக்கும் கிணற்றிலிருந்து தண்ணீரை எடுத்து கேன்களில் நிரப்புவதற்காக பெரும்பாலான குழந்தைகளும், டஜன் கணக்கான மக்களும் வரிசையில் காத்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே 27 சதவீதம் கிராமப்புற மக்களுக்கு சுகாதார வசதிகள் உள்ளதாகவும், 42 சதவீதம் ஆப்கானியர்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதாகவும் USAID தெரிவித்துள்ளது. அதேசமயம் உலக உணவு திட்டத்தின் படி (WFP) தண்ணீர் பற்றாக்குறை தீவிரமடைந்தால் பெரும் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.