குழாய்களில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்து குடிநீர் சீராக விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல முக்கிய பகுதிகளில் 10 நாட்களுக்கு ஒருமுறை தான் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. மேலும் பல முக்கிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள கருவம்பாளையம், ஆலங்காடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறுகிறது.
இவ்வாறு சாலையில் வீணாக வெளியேறும் தண்ணீரை பலர் குடங்களில் பிடித்து செல்கின்றனர். இதுகுறித்து தகவல் தெரிவித்தும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்து சீராக குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.