Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இப்படி வீணா போகுதே…. மும்முரமாக நடைபெறும் பணி… பொதுமக்களின் கருத்து…!!

தொட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் சாலையில் வீணாக பெருக்கெடுத்து ஓடியது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் குனியமுத்தூர், கிணத்துக்கடவு, குறிச்சி போன்ற பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு குடிநீரானது குனியமுத்தூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ்  விநியோகிக்கப்படுகிறது. எனவே கிணத்துக்கடவில் அமைக்கப்பட்டுள்ள தரைமட்ட தொட்டியில் குடிநீர் சேகரிக்கப்பட்ட பிறகு குறிச்சி, குனியமுத்தூர் போன்ற பகுதிகளில் வாழும் பொது மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த தரைமட்ட தொட்டியில் இருக்கும் குழாயில் திடீரென விரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து குழாயில் ஏற்பட்ட விரிசலை சரி செய்யும் பணி நடந்து வருவதால் தொட்டியில் சேமிக்கப்பட்ட தண்ணீரை வெளியேற்றியுள்ளனர். இவ்வாறு வெளியேற்றப்பட்ட தண்ணீர் கிணத்துக்கடவு பெரியார் நகர் முதல் செம்மொழி கதிர் நகர் சாலை வரை வீணாக பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே தண்ணீரை வீணாக்காமல் பயனுள்ள வகையில் அதை செலவிட்டால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |