Categories
சேலம் மாநில செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது …!!

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து  2 லட்சம் கன அடியில் இருந்து  தற்போது 1.50 லட்சம் கனஅடியாக குறைந்துள்ளது.

கேரளா ,கர்நாடகா , காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வரும் நிலையில் தொடர்ந்து மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்து வருகின்றது. இதனால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது.மேலும் அணையின் நீர் மட்டம் 100-யை தாண்டிய நிலையில் பாசனத்திற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேட்டூர் அணையை திறந்து விட்டார்.

Image result for Water shortage in Mettur Dam ...

தொடர்ந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2 லட்சம் கன அடியாக இருந்த நிலையில் தற்போது 1.50 லட்சம் கனஅடியாக குறைந்துள்ளது. காவிரி ஆற்றில் இருந்து அதிகமாக நீர்வரத்து வருவதன் காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் 106.70 அடியை தாண்டியது.அதே போல பிலிகுண்டுலுவுக்கு வரும் நீரின்வரத்து 1.90 லட்சம் கன அடியிலிருந்து 80 ஆயிரம் கன அடியாக  குறைந்துள்ளது.

Categories

Tech |