சுடுகாட்டில் இருக்கும் மழைநீரை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ஏலகிரி பகுதியில் சுடுகாடு அமைந்திருக்கின்றது. இதில் புது ஓட்டல் தெரு, சந்தை, கோட்டியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல பகுதிகளில் யாரேனும் இறந்து விட்டால் அவர்களை ஏலகிரி சுடுகாட்டில் அடக்கம் செய்து வருகின்றனர். ஆனால் கடந்த வாரம் ஜோலார்பேட்டை மற்றும் ஏலகிரி மலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது.
இதனை அடுத்து நீலகிரி சுடுகாட்டில் மழைநீர் தேங்கி கிடக்கின்றது. அதனால் யாரேனும் இறந்தால் அவர்களின் உடல்களை அடக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதன்பின் ஏற்கனவே இறந்தவர்களின் நினைவு நாளில் அவர்களுடைய நினைவிடத்திற்கு செல்ல முடியாத சூழ்நிலை நிலவுகிறது. இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கூறியுள்ளனர். மேலும் மழை நீரை அப்புறப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.