திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் சாலை பணிக்காக அமைக்கப்பட்ட மாற்றுப்பாதையில் தண்ணீர்தேங்கி இருந்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
செய்யாறு மற்றும் புலியிரம்பாக்கம் இடையே சாலை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.இதையொட்டி அப்பகுதிகளில் ஏரிகளின் வழியே மாற்றுப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அப்பகுதியில் பெய்த மழையால் மாற்றுப்பாதையில் நீர் தேங்கி வாகனங்கள் பயணிப்பதில் சிக்கல் உருவாகியுள்ளது.
வாகனங்களின் சக்கரங்கள் சேற்றில் சிக்கிக் கொள்வதால் கடும் அவதி அடைவதாக புகார் கூறும் அப்பகுதி மக்கள் மாற்றுப் பாதையை உடனடியாக சரி செய்ய வேண்டும் எனவும்,புதுப்பிக்கப்பட்டு வரும் நிரந்தர சாலைக்கான பணிகளை விரைந்து முடிக்குமாறும் அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.