கர்நாடகாவில் இருந்து காவேரிக்கு உறுதியாக தண்ணீர் வரும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
பாஜக உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசனை கூட்டம் நடத்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் திருச்சி வந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தண்ணீர் பிரச்சினைக்கு ஒரே தீர்ப்பாயம் அமைக்கப்படுவதால் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணிர் நிச்சயம் வரும் என்று தெரிவித்தார்.
மேலும் ஒரே தீர்ப்பாயம் அமைக்கப்பட்டால் காவிரி, கோதாவரி, கிருஷ்ணா, பாலாறு என அனைத்து நதிகளிலும் தண்ணீர் கட்டாயம் வரும் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தமிழக உரிமைகளை பாதுகாப்பதில் பாஜக எந்த வித்திலும் பின்வாங்காது என்றும், தமிழுக்கு பெருமை சேர்ப்பதிலும் பாஜக தொடர்ந்து முயற்சிகளை தெரிவித்துக் கொள்கிறார்.