குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறுவதால் பொதுமக்கள் வருத்தத்தில் உள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள முகவூர் அம்பேத்கர் சிலை அருகில் தாமிரபரணி குடிநீர் குழாய் அமைந்துள்ளது. இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு அதிலிருந்து வீணாகும் குடிநீர் சாலையோரம் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வருத்தத்தில் உள்ளனர்.
அதோடு தண்ணீரின் தேவையானது அதிகமாக இருக்கும் இந்த கோடை காலத்தில் வீணாக செல்லும் குடிநீரை தடுத்து நிறுத்தும் வண்ணம் குழாயில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்யுமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.