Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

குழாயில் ஏற்பட்ட உடைப்பு…. சிரமப்படும் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

குடிநீர் குழாயில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள எல்லப்பாளையம் செல்லும் வழியில் குடிநீர் குழாய் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் வீணாக வெளியே செல்கிறது. அப்பகுதியில் குடிநீர் தேங்கி அசுத்தம் அடைவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறும் போது, குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்து சீராக குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |