உடல் உஷ்ணத்தை குறைக்கும் தர்பூசணி ஜூஸ் செய்வது எப்படி பார்க்கலாம் வாங்க ..
தேவையான பொருட்கள்:
தர்பூசணி பழம் – 1 கப்
சீனி – தேவையான அளவு
எழுமிச்சை பழச்சாறு – 1/2 தேக்கரண்டி
இஞ்சி – சிறிதளவு
மிளகு பொடி – சிறிதளவு
புதினா இலைகள் – சிறிதளவு
செய்முறை:
மிக்சியில் தர்பூசணி பழத்துண்டுகள் , எலுமிச்சை சாறு, சீனி, இஞ்சி, சிறிது தண்ணீர் சேர்த்து அடித்து கொள்ள வேண்டும். பின்பு அதனை வடிக்கெட்டி, அதனுடன் சிறிதளவு மிளகு தூள், பொடிதாக நறுக்கிய புதினா சேர்த்து பரிமாறினால் சுவையான தர்பூசணி ஜுஸ் தயார்!!!