ஐ.பிஎல் இறுதிப் போட்டியில் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி வீரர் ஷேன் வாட்சன், காலில் ரத்தம் வழிந்த போதும் விளையாடிய புகைப்படத்தை ஹர்பஜன் சிங் பதிவிட்டுள்ளார்.
ஐபிஎல் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 149 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய சென்னை அணி 7 விக்கெட் இழந்து 148 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சென்னை அணி 1 ரன் வித்தியாசத்தில் தோற்று கோப்பையைத் தவற விட்டது. சென்னை அணி பேட்டிங்கில் அடுத்தடுத்து வீரர்கள் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
இருப்பினும் தொடக்க வீரர் ஷேன் வாட்சன் மட்டும் தனி ஒருவராக அதிரடியாக விளையாடி 59 பந்துகளில் 80 ரன்கள் (8 பவுண்டரி 4 சிக்ஸர்) குவித்தார். அவருக்கு கால் முட்டியில் அடி பட்டு ரத்தம் வழிந்த பிறகும் அணியின் வெற்றிக்காக அவர் விளையாடியதாக சக வீரர் ஹர்பஜன் சிங் உருக்கத்துடன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். போட்டி முடிந்தபிறகு சேன் வாட்சனின் கால் மூட்டுப் பகுதியில் 6 தையல் போடப்பட்டதாகவும் ஹர்பஜன் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
https://www.instagram.com/p/BxbuC5fBFh3/?utm_source=ig_web_button_share_sheet