Categories
டெக்னாலஜி பல்சுவை

வாட்ஸ் அப்பை விட்டு வெளியேறும் மக்கள்… காரணம் என்ன…?

சமிபத்தில் வாட்ஸ்அப்பில் சில விதிமுறைகள் மாற்றப்பட்டது. இதில் வாட்ஸ் அப்பை நீங்கள் திறந்ததும் உங்களுக்கு ஒரு அறிவிப்பு வெளியாகியிருக்கும். அதற்கு சம்மதம் தெரிவித்தால் மட்டுமே வாட்ஸ் அப்பை நீங்கள் பயன்படுத்த முடியும். இல்லையெனில் உங்களது கணக்கு முடக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

தற்போது பலரும் வாட்ஸ் அப்பில் இருந்து வெளியேற நினைப்பதற்கும் அந்த அறிவிப்பு தான் முக்கிய காரணம். அதாவது உங்களின் தனிப்பட்ட தகவல்களை அதன் விளம்பர நோக்கங்களுக்காக பயன்படுத்தலாமா என்று தான் அந்த அறிவிப்பில் அனுமதிக் கேட்கப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவிக்கும் பட்சத்தில் உங்களின் கணக்கு முடக்கப்படும்.

இதற்கு சம்மதம் தெரிவிக்கும் போது உங்கள் தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, தொடர்புகள், இடம், சாதன ID, பயனர் ID, விளம்பரத் தரவு, கொள்முதல் வரலாறு, தயாரிப்பு தொடர்பு, கட்டணத் தகவல், செயலிழப்பு தரவு, செயல்திறன் தரவு, பிற கண்டறியும் தரவு, வாடிக்கையாளர் ஆதரவு, தயாரிப்பு தொடர்பு, பிற பயனர் தகவல்கள், உள்ளடக்கம், மெட்டாடேட்டா போன்ற தகவல்கள் அனைத்தையும் பேஸ்புக் நிறுவனம் உங்களிடம் இருந்து சேகரிக்கிறது.

இதனால் உங்களது தனியுரிமை முற்றிலுமாகப் பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக தற்போது பலரும் வாட்ஸ் அப்பை விட்டு வெளியேறி சிக்னல் மற்றும் டெலகிராம் போன்ற செயலிகளை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

Categories

Tech |