ராமநவமி அன்று எவ்வாறு விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்பது பற்றிய சிறப்பு தொகுப்பு
திருமாலின் அவதாரங்களில் சிறப்புமிக்க அவதாரமான ராமாவதாரம் மனிதனின் நீதி முறைகள் இப்படித்தான் வாழவேண்டும் என்று ஒழுக்க நியதிகள் மற்றும் ஆன்மிக லட்சியங்கள் குறித்து உறுதியான கொள்கை நமக்கு விளங்க வேண்டும் என்ற எடுத்துரைப்பதே மண்ணில் அவதரித்தார் ஸ்ரீ ராமர் என்று கூறுகிறது புராண வரலாறு அவ்வாறு அவர் அவதரித்த நாள் ராமநவமி என்று கொண்டாடப்படுகின்றது.
ராமநவமி அன்று அதிகாலையில் குளித்துவிட்டு வீட்டை தூய்மைப்படுத்தி விரதம் கடைபிடிக்க வேண்டும். பூஜை அறையில் ராமர் படத்தை நன்றாக சுத்தம் செய்து குங்குமம் சந்தனம் போன்றவற்றால் பொட்டிட்டு துளசி மாலை அணிவிக்க வேண்டும். அதன் பின்னர் பழம், வெற்றிலை, பூ இவற்றை வைத்து ராம நாமத்தை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். சாதம், பாயாசம், வடை, நீர்மோர், பஞ்சாமிர்தம் இவற்றை நெய்வேத்தியமாக படைக்கலாம்.
அன்றைய தினம் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். ராமரைப் பற்றிய நூல்களைப் படித்தும் பாராயணம் செய்வதுமாக இருக்கவேண்டும். அன்றைய தினம் ராமர் கோவில்களில் நடைபெறும் பட்டாபிஷேகத்தை கண்டு களிக்கலாம். அர்ச்சனை முடிந்தபின் நெய்வேத்தியமாக வைத்த சர்க்கரைப் பொங்கலை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.
காலையில் உணவு ஏதும் சாப்பிடாமல் ராமநவமி விரதம் இருந்து ராமபிரானை வணங்கி வழிபடுபவர்களுக்கு ஆஞ்சநேயரின் அருள் பார்வை கிடைக்கும். அதனால் குடும்பத்தை விட்டுப் பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள், லக்ஷ்மி கடாட்சம் கிடைக்கும், பகைவர்கள் நண்பர்களாக மாறிவிடுவார்கள், வியாதியும் நீங்கும், தொலைந்து போன பொருட்கள் கிடைக்கும், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும், வருமையின் பிடியும் அகலும், நாடிய பொருள் கைகூடும்.
ஸ்ரீராமஜெயம் என்ற எழுத்தை 108 முறை அல்லது 1008 முறை எழுதலாம். ஸ்ரீராமஜெயம் என்ற மந்திரத்தை மூன்று முறை அடுத்தடுத்து உச்சரிக்க வேண்டும். இந்த சக்தி வாய்ந்த மந்திரத்தால் ஆணவம் அழிந்து அன்பும் அறிவும் அதிகரிக்கும். மனதில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும்.