ஸ்ரீராமநவமி எளிய வழிபாட்டு முறை தற்போது உள்ள சூழ்நிலையில் ராமநவமி ஆலயம் சென்று வழிபடுவது என்பது சற்று கடினமான விஷயம். எனவே வீட்டிலேயே ராம நவமி பூஜை வழிபாடு மேற்கொள்ளும் முறை.
ஸ்ரீ ராமநவமி அன்று இரண்டு முறையில் வழிபாடு செய்வார்கள். ஒன்று விரதமிருந்து வழிபாடு செய்வது. இரண்டாவது எப்போதும் போல் பூஜை செய்வது. விரதம் இருந்து வழிபாடு செய்பவர்கள் அன்று முழுவதும் உபவாசம் இருக்க வேண்டும். அதாவது திரவ உணவுகளை மட்டும் எடுத்துக்கொண்டு இருக்க வேண்டும். காலை மாலை என இரு வேளை பூஜை செய்து மாலையில் பூஜை நிறைவு பெற்ற பின்னர் விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.
விரதம் வேண்டாம் பூஜை மட்டும் போதும் என்பவர்கள் காலை மாலை என இருவேளையும் பூஜை செய்வது அவசியம். குறிப்பாக காலையில் செய்யும் பூஜை தவறக்கூடாது காலை 9 மணிக்குள் காலை பூஜையை முடித்து விடவேண்டும். நெய்வேத்தியம் நீர்மோர், பாயாசம், சர்க்கரைப் பொங்கல், கற்கண்டு சாதம் இதில் எது கிடைக்கிறதோ அதனை நெய்வேத்தியமாக படைக்கலாம். இதனை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டால் ஒரு தட்டில் வெல்லம் அல்லது சர்க்கரை இல்லை கருப்பட்டி ஏதேனும் ஒன்றை சாமிக்கு நெய்வேத்தியமாக வைக்கலாம்.
வீட்டில் ராமர் படம் இருந்தால் அதனை சுத்தம் செய்து துளசி மாலை அணிவித்து வழிபாடு மேற்கொள்ளலாம். வழிபாடு செய்பவர்கள் காலையும் மாலையும் சுந்தரகாண்டம் படிப்பது நல்லது. காலையில் பூஜை அறையில் நெய்தீபம் ஏற்றி நெய்வேத்தியம் படைத்து கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து ஓம் ஸ்ரீ ராமாய நமக என்னும் மந்திரத்தை 108 முறை சொல்லி காலை பூஜையை முடியுங்கள்.
மாலை 6 மணிக்கு மேல் 8 மணிக்குள் ஓம் ஸ்ரீ ராமாய நமஹ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லி விரதத்தை முடித்துக் கொள்ளலாம் அல்லது பூஜையை முடித்து கொள்ளலாம் இது இரண்டையும் செய்ய முடியாது என்பவர்கள் நாளை ஸ்ரீராமஜெயம் என்னும் அருமையான மந்திரத்தை எத்தனை முறை எழுத முடியுமோ அத்தனை முறை எழுதி ராமனின் நினைவில் மூழ்கலாம்.