Categories
ஆன்மிகம் கிறிஸ்த்து

சொர்க்கத்திற்குப் செல்வதற்கான வழி

வேதம் சொல்கிறது கீழ்காணும்   கட்டளைகளை கடைபிடித்தால் மனிதர்கள் சொர்க்கத்திற்கு செல்லலாம் என்று ஆகவே கவனமாக படியுங்கள் :

1.பொய்சொல்லாதிருப்பாயாக.

அனைவரிடத்திலும் உண்மையாக இருக்க வேண்டும் பொய் கூறுவதால் சில நேரங்களில் மற்றவரையும் அது பாதிக்கும் ஆகையால் பொய் சொல்லுவதை தவிர்க்க வேண்டும் .

2.திருடா தீர்ப்பாயாக.

உழைத்து உண்ண   வேண்டும் பேராசைகளை கட்டுப்படுத்தவேண்டும் பேராசை ஒருவனை திருட தூண்டும் .மற்றவர் பொருளுக்கு ஒரு போதும் ஆசை படக்கூடாது

3.விபச்சாரம் செய்யாதிருப்பாயாக.

நீங்கள்நினைக்கலாம் தன் மனைவிக்கு நான் உண்மையாக இருக்கிறேன் என்று ஆனால் வேதம் சொல்கிறது ஒரு பெண்ணை தவறான கண்ணோட்டத்தில் பார்த்தாலே, அவள் உடன் விபச்சாரம் செய்தாய் என்று.

4.கர்த்தருடைய நாமத்தை வீணாய் பயன்படுத்தாது இருப்பாயாக.

செய்கிற ஒவ்வொரு செயலும் நன்மையை அமைய வேண்டும் என அடிக்கடி கர்த்தரின் நாமத்தை கூறி பிரதிக்கு கூடாது ஏனென்றால் நம்மை படைத்த அவருக்கு எப்பொழுது நமக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும் .கர்த்தர் நாமத்தை வீணாய் பயன்படுத்தினால் வீண் பிரச்சனைகள் தான் வரும் இன்னும் சொல்ல வேண்டுமானால்  நீங்கள் கோபத்தில் இருக்கும்போது கெட்ட வார்த்தையோடு கடவுள் பேரையும் சேர்த்து சொல்வதுதான் தேவதூஷணம்.

தேவன் நமக்கு கொடுத்த வாழ்க்கையை நாம் வீணாய் பயன்படுத்துகிறோம் பைபிள் சொல்கிறது தேவனுக்கு நம் இதயத்தின் ரகசியங்கள் எல்லாம் தெரியும் நீங்கள் சில நேரம் நினைக்கலாம் மற்றவர்களோடு  என்னை ஒப்பிடும்போது நான் பரவாயில்லை என்று ஆனால் கடவுளோ அவருடைய சட்டத்தின்படி தான் தண்டிப்பார் தவிர மற்றவர்களை ஒப்பிட்டு தண்டிக்க மாட்டார் .

சின்ன எடுத்துக்காட்டு பார்ப்போம்.

ஒரு நாளைக்கு நீங்கள் 5 பாவம் செய்தால் வருடத்திற்கு 1825 பாவங்கள் பண்ணியிருப்போம் இதே கணக்குபடி எழுபது வருஷம் வாழ்ந்தால் ஒரு லட்சத்து 27 ஆயிரம் பாவங்கள் செய்து இருப்போம் .

கடைசி காலத்தில் அவரவர்  பாவத்திற்கு கணக்கு ஒப்புவிக்க வேண்டும். நாம் பாவிகளாய் இருந்தாலும் பரலோகம் செல்ல முடியாது செல்ல ஒரே வழி அவர் மட்டும்தான்.

இயேசு கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக மனிதனாய் பிறந்து கஷ்டப்பட்டு அடிபட்டு நமக்காக சிலுவையில் அறையப்பட்டார் .அதனாலதான் பாவியாய் இருந்த நமக்கு விடுதலை கிடைத்தது .அதன்பின் மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து மரணத்தை ஜெயித்தார் .யாரெல்லாம் இயேசுவின் முன் தாழ்மையாய் இருக்கிறார்களோ அவர்களை மன்னித்து புது இருதயத்தை தருகிறார் .

பைபிள் சொல்கிறது ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புது  சிருஷ்டியாய் இருக்கிறான்

மேற்காணும் கட்டளைகளை பின்பற்றினால் சொர்க்கத்திற்கு செல்லலாம் என்பதை தாண்டி நிஜ வாழ்க்கையே சொர்க்கமாக மாறிவிடும் .

Categories

Tech |