சித்ரா ஒரு கல்லூரி மாணவி இரண்டு ஆண்டுகளைக் கடந்து மூன்றாம் ஆண்டில் கால் வைத்தால் அழகும், அறிவும் உடையவள் .சித்ரா இதுவரை எந்த ஒரு இதிலும் ஈடுபடாமல் மறைந்து வாழ்ந்து வந்தாள் .அவளுக்கு பாடம் எடுக்க வந்த கலா ஆசிரியர் அவருடைய திறமைகளை வெளியே கொண்டு வந்தார் .தமிழில் அழகாக வாசிக்க, எழுதும் திறமை கொண்டவள். கல்லூரியில் நடந்த முக்கியமான நிகழ்வு அவளை கலந்து கொள்ள பரிந்துரைத்தார்கள் .
நகரத்தில் இருந்து வந்த ஒரு வானொலி ஒளிப்பதிவாளர் இவளுடைய திறமைகளைக் கண்டு தன்னுடைய வானொலியில் பயன்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தார் .அப்படி அவள் ஒரு நாள் ஒளிப்பதிவுகு்கு சென்ற போது குறும்படம் எடுக்கும் தயாரிப்பாளர் அவளுடைய திறமையை பார்த்து தான் அடுத்ததாக எடுக்கும் குறும்படத்தில் அவளை பதிவு செய்து கொண்டார்.
இன்று அநேகர் தங்களுக்கு இருக்கும் திறமைகளை கண்டறியாமல் விட்டுவிடுகிறார்கள். அப்படி அவர்கள் அவர்களைப் பற்றி அறிந்திருந்தாலும் தங்களால் எதுவும் செய்ய முடியாது என்று நினைக்கிறார்கள் .ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் .உங்களுக்கு இருக்கும் திறமையை அது என்னவென்று அறிந்து மற்றவர்களுக்கு பயனுள்ளதாக மாற்றுங்கள் என்னிடம் திறமை இல்லை என்று யாரும் சொல்ல முடியாது.
உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி முன்னேற வேண்டும் என்று ஒரு வெறி வேண்டும்உங்களுடைய திறமைகளை உங்களை மட்டம் தட்டிய எல்லோர் முன்னாள் நீங்கள் நிரூபித்து சாதித்துக் காட்ட வேண்டும் வெறி இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும் வெற்றி என்றும் உங்கள் கையில்
உங்களது அசாத்திய திறமைகளை வெளிப்படுத்தும் பொழுது வந்த உலகம் உங்களது வெளித்தோற்றத்தை மறந்து விடுகிறது . மக்கள் செல்வன் விஜய் சேதுபதிஸ்டைலில் சொல்லனும்னா “வாழ்க்கைல ஜெயிக்கணும்னா வெறி வேணும் சார் “