நாங்கள் வடகொரியாவை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்
உலக நாடுகள் முழுவதும் கொரோனா தொற்றினால் துன்பப்பட்டு வந்த நிலையில் அணு ஆயுத ஏவுகணை சோதனைகளை நடத்தி சர்ச்சைக்குரிய நாயகனாக வலம் வந்தவர் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன். சில வாரங்களாக எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் இருக்கும் கிம் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், கோமாவில் இருப்பதாகவும், ஏன் இறந்துவிட்டார் எனக் கூட ஒரு வாரமாக வதந்திகள் வலம் வந்தது.
இந்நிலையில் கிம் ஜாங் மாயமானது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக்கேல் தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த பொழுது “கிம் ஜாங் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. வேற எந்த புதிய தகவல்களும் இல்லை. ஆனால் வடகொரியாவின் அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகின்றோம். வடகொரியா அணு ஆயுதங்களை கைவிட வேண்டும் என்ற ஒன்றே எங்கள் குறிக்கோள். எனவே அந்த நாட்டை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்” என கூறினார்