Categories
தேசிய செய்திகள்

மே மாதத்திற்குள் 10 லட்சம் RTPCR கிட்களை உள்நாட்டிலேயே உருவாக்க இலக்கு: மத்திய சுகாதாரத்துறை!

நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இல்லாத போது கொரோனா பாதித்தவர்களின் இரட்டிப்பு விகிதம் சுமார் 3 நாட்களாக இருந்தது. ஆனால், ஊரடங்கு அமலில் இருந்த பிறகு, குறிப்பாக கடந்த 7 நாட்களில் எடுத்த தரவுகளின் அடிப்படையில், கொரோனா பாதித்தவர்கள் இரட்டிப்பு விகிதம் 6.2 நாட்களாக ஆக உள்ளது என மத்திய இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளது. இதிலிருந்து கொரோனா பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

சுமார் 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனா தொற்றின் இரட்டிப்பு விகிதம் சராசரி இரட்டிப்பு விகிதத்தி விட குறைவு என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் கூறியுள்ளார். கேரளா, உத்தரகண்ட், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், சண்டிகர், லடாக், புதுச்சேரி, டெல்லி, பீகார், ஒடிசா, டி.என், ஆந்திரா, உ.பி., பஞ்சாப், அசாம், திரிபுரா என 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரட்டிப்பு விகிதம் தேசிய அளவை விட குறைவாக உள்ளது. மேலும் அவர் கூறியதாவது, ” எங்கள் நடவடிக்கைகள் அனைத்தும் தடுப்பூசி வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் கவனம் செலுத்தப்படுகிறது.

COVID19-ஐ எதிர்த்து போராட மறுசீரமைப்பு பி.சி.ஜி, கான்வெலசென் பிளாஸ்மா சிகிச்சை, மோனோக்ளோனல் ஆன்டிபாடிஸ் உள்ளிட்ட சிகிச்சை முறைகளை மேற்கொள்ள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1,007 பேருக்கு புதிதாக கொரோனா தோற்று உறுதியாகியுள்ளது. 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து நாட்டில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 13,387 ஆக அதிகரித்துள்ளது. அதில், 11,201 பேருக்கு தற்போது சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. 1,748 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 437 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்தியாவில் கொரோனாவால் குணமடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்களின் விகிதம் 80:20 ஆக உள்ளது. ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து நாடுமுழுவதும் கொரோனா பரவலின் சராசரி விகிதம் 1.2 பதிவாகியுள்ளது. இது கடந்த மார்ச் மாத விகிதத்தை விடைக்குறைவு. மார்ச் 15ம் தேதியில் இருந்து மார்ச் 31ம் தேதி வரை கொரோனா பரவலின் விகிதம் 2.1 பதிவாகியிருந்தது. கொரோனா பரிசோதனைகள் அதிகப்படுத்தப்பட்டதில் இருந்து இதுவரை 40% பாதிப்பு குறைந்துள்ளது என இணை அமைச்சர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். மேலும், மே மாதத்திற்குள் 10 லட்சம் ஆர்.டி.பி.சி.ஆர் கிட்களை உள்நாட்டிலேயே உருவாக்க இலக்கு வைத்துள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |