நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் சீமான், பட்டமளிப்பு விழாவில் போயிட்டு ஐயா பொன்முடி அவர்கள்… உயர்கல்வித்துறை அமைச்சர்…. தமிழக மாணவர்களுடைய கல்வியை கல்வித்தரத்தை உயர்த்துவதற்கு கல்வியை… தயவு கூர்ந்து. கெஞ்சி கேட்கிறோம். மிகப் பணிவுடன் கேட்கிறோம், குனிவுடன் கேட்கின்றோம்.
நீங்கள் எப்படியாவது உதவி செய்ய வேண்டும். இதுதா மதவாதத்திற்கு எதிரான திராவிடம் ? இவர் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும்போது ஐயா மோடி ஐயாவை பாசிஸ்ட் என்று பேசியது இருக்கிறது. அந்த பாஸ்ட் இல்லாமல் இவர்களுக்கு எதுவும் கிடையாது. சிலை திறக்கணுமா ? அவரு வரணும். நல திட்டம் போட வேண்டுமா அவர் வரவேண்டும்.
எல்லாவற்றிற்கும் அவர் வரவேண்டும்.இப்போ சதுரங்க விளையாட்டிற்கு வரணும். அண்ணா பல்கலைக்கழகத்தில் பட்டம் வாய்ப்பு விழாவில் ஐயா முதல்வர் பேசிய பேச்சுக்கள் இருக்கிறது. எப்படிப்பட்ட நாட்டினுடைய மிக முதன்மையான அமைச்சர், பாரத பிரதமர், மாண்புமிகு பாரத பிரதமர் கையாலே நீங்கள் பட்டம் வாங்குகிறீர்கள்.
வருங்காலத்தில் உங்கள் பேரன், பேத்திகளிடத்தில் நீங்கள் பெருமையாக காட்டிக்கொள்ளலாம். அப்படி காட்டும்போது இவர் கையில் நீங்கள் பட்டம் வாங்கியுள்ளீர்கள்… என்று கேட்பார்கள். பட்டம் வாங்கிவர்கள் பேரன், பேத்தி எடுக்கும் போது நாடு சுடுகாடாக மாறி இருக்குமோ. அப்போ கேட்பார்கள் அல்லவா…. நீ அவரு கையிலையா பட்டம் வாங்குன.. கருமம் என சொல்வார்கள் என ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசை விமர்சித்தார்.