தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை தில் ராஜு தயாரிக்க ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் நிலையில் நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் டிசம்பர் 24-ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.
2 வருடங்களுக்கு பிறகு நடிகர் விஜயை பிரமாண்ட மேடையில் பார்ப்பதற்கு அவருடைய ரசிகர்கள் மிகுந்த ஆவலில் இருப்பதோடு குட்டி ஸ்டோரியை கேட்பதற்கும் ஆர்வத்தோடு இருக்கிறார்கள். இந்நிலையில் வாரிசு படத்தில் இசை வெளியீட்டு விழாவை நேற்று ஒரு வீடியோவுடன் படக்குழு அறிவித்தது. இந்த வீடியோவை ராஷ்மிகா மந்தனா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து உங்களைப் பார்க்க 24-ஆம் தேதி வருகிறோம் என்று பதிவிட்டுள்ளார். மேலும் நடிகை ராஷ்மிகாவின் பதிவால் வாரிசு இசை வெளியீட்டு விழாவின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
See youuuu on 24th December for Varisu Audio Launch ❤️🌸 https://t.co/LDn6sQihEr
— Rashmika Mandanna (@iamRashmika) December 21, 2022