Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்க சொல்லுறத செய்யுங்க… இல்லேனா தேர்தலே வேண்டாம்… முதல்வர் பரபரப்பு பேட்டி …!!

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி முதல் அமைச்சர் நாராயணசாமி தேர்தலை புறக்கணிக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது “கடந்த 35 ஆண்டுகளாக புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதற்காக காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் சேர்ந்து போராடி வருகின்றனர்.

எனவே புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டி தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்பதே தங்களது கருத்து என்றும், ஆனால் கட்சித் தலைமை என்ன முடிவு சொல்கிறதோ அதுவே செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பாஜகவின் எண்ணம் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கூடாது என்பதுதான். இதுகுறித்து குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியவர்களிடம் புகார் அளித்தும் அவை தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |