ஆதரவாளர்கள் அமைதி காக்கவேண்டும் என்று ஆதரவாளர்களுக்கு ஜோ பைடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமெரிக்காவைப் பொறுத்தவரை தேர்தல் நாள், தேர்தல் இரவு இரண்டு இருக்கிறது. தேர்தல் காலையில் இறுதிநாள் வாக்குப்பதிவு நடக்கிறது. அன்று இரவே வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. உடனடியாக முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அமெரிக்க அதிபர் எப்போது பதவியேற்பார் என்றால் ? ஜனவரி மாதம் 20ஆம் தேதி, இரண்டு மாதங்களுக்கு மேலாக தான் பதவி ஏற்கப் போகிறார். இந்த இடைப்பட்ட காலம் எதற்காக வைத்திருக்கிறார்கள் என்றால் ? தேர்தல் முடிவுகள் இதற்குள்ளாகவே டிசம்பர் மாத இறுதிக்குள் அறிவிக்க வேண்டும் என்பதுதான் அவர்களுடைய தேர்தல் நடைமுறை.
சில நேரங்களில் ஒரு மாதம் கழித்து கூட தேர்தல் முடிவுகள் வந்திருக்கின்றன. ஆனால் வழக்கமாக கடந்த சில தேர்தல்களில் தேர்தல் முடிவுகள் இந்திய நேரப்படி மதியத்திற்குளாகவே வந்து விடுகின்றன. எனவே இன்னும் 1 மணி நேரத்தில் அமெரிக்கா அதிபர் யார் என்று தெரிந்து விடும், 270 தேர்தல் சபை உறுப்பினர்களை பெற்றால் வெற்றியாளராக அறிவிக்கப்பட இருக்கும் நிலையில் டிரம்ப் 213 உறுப்பினர்களையும், ஜோ பைடன் 237 உறுப்பினர்களையும் பெற்றுள்ளனர்.
வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது. முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்ன. தொடர்ந்து ஜோ பைடன் முன்னிலை வகித்து வந்த நிலையில் அவர் அமெரிக்க நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதில், அமெரிக்க அதிபர் தேர்தலில் நாம்தாம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. முழு முடிவுகள் வரும் வரை தமது கட்சி ஆதரவாளர்கள் அமைதி காக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.