வேலுநாச்சியார் – கிபி 1, 780 – கிபி 17803
ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிராக போராடிய முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமை வேலுநாச்சியார் அவர்களையே சாரும். சிவகங்கை தலைநகரான காளையர் கோவிலில் இருந்த கிழக்கிந்திய கம்பெனியின் படையை வேலுநாச்சியார் உக்கிரத்தோடு எதிர்ப்பதன் மூலம் தமிழக மகளிர் வீரத்தின் குறைந்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்தார் .
ராணி சென்னம்மா – 1824- 1829
ஆங்கிலேயரை மிகவும் துணிச்சலுடன் தைரியத்துடன் பெரும் ஆற்றலுடன் எதிர்த்துப் போரிட்டவர் ராணி சென்னம்மா. ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்டு வீரமரணம் அடைந்த ராணி சென்னம்மா கர்நாடக மாநிலத்தில் ஒரு பெரும் வீராங்கனையாக இன்றும் போற்றப்படுகிறார்.
ராணி லட்சுமிபாய் :
ஜான்சியின் மஹாராணி இந்திய பெண்களிள் வீரத்தில் உலகிற்கு வேறு யாருக்கும் சளைத்ததல்ல என்று ஆங்கிலேய அரசுக்கு நிரூபித்துக் காட்டியவர் ஜான்சிராணி இலட்சுமிபாய். 1857 இந்தியக் கிளர்ச்சியில் பெரும்பங்காற்றி இந்திய பிரிட்டிஷாரின் ஆட்சிக்கு எதிராக கிளர்ந்து எழுந்து , பிரிட்டிஷாருக்கு எதிராகப் படைகளை திரட்டினார். நாட்டின் உரிமைக்காக போர் நடத்தி தன் இன்னுயிரை போர்க்களத்தில் இழைத்ததால் இன்னும் நம் மகளிரின் லட்சிய நாயகியாக இவர் போற்றப்படுகிறார்.
ஜல்காரிபாய் – 1857
இந்தியக் கிளர்ச்சியில் போது ஜான்சியின் போரில் முக்கிய பங்கு வகித்த ஒரு இந்திய சுதந்திரப் போராட்ட வீராங்கனை ஆவார். இவர் ஜான்சிராணி இலட்சுமிபாய்யுடைய பெண் படையை சேர்ந்திருந்தார். ஆங்கிலேய அரசை ஏமாற்றும் நோக்கில் ஜல்காரிபாய் ராணிலட்சுமிபாயை போல உடை அணிந்து கொண்டு படைக்குத் தலைமை தாங்கினார் .
ராணி அவந்திபாய் :
நாட்டை ஆங்கிலேயரிடமிருந்து மீட்க உறுதி பூண்டார். அவந்திபாய் நான்காயிரம் வீரர்களை திரட்டிக் கொண்டு 1857 ஆம் வருடம் ஆங்கிலேயருக்கு எதிராகப் படையெடுத்துப் புறப்பட்டார். மிகவும் தைரியமாக போர் புரிந்தும் கூட ஆங்கிலேயரின் பெரும் படைக்கு முன் அவந்திபாய் தாக்கு பிடிக்க முடியவில்லை. தனது தோல்வியை தெரிந்து கொண்ட ராணி அவந்திபாய் 1858 ஆம் வருடம் மார்ச் மாதம் 20ஆம் தேதி தனது வாலை கொண்டு தன்னைத் தானே மாய்த்துக் கொண்டு வீர மரணம் அடைந்தார்.
ஜானகி ஆதி நாகப்பன் :
சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்து இந்தியாவின் விடுதலைக்காக போராடியவர். தன்னுடைய 18 ஆவது வயதில் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்து ஜான்சி ராணி படையில் துணைத் தளபதியாகப் பதவி உயர்ந்தவர். பர்மா என்ற இந்திய எல்லையில் துப்பாக்கி ஏந்தி ஒரு போர் வீராங்கனையாக களம் கண்டவர். இந்தியாவின் பத்மஸ்ரீ விருது பெற்ற முதல் மலேசியப் பெண்.
அன்னிபெசன்ட் :
இயற்கையிலேயே புரட்சி மனப்பான்மை கொண்டவர் ஆதலால் ஆங்கில அரசின் அடக்கு முறைகள் அவரை வெகுவாகப் பாதித்தன. விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக காமன் வீல் என்ற வாரப் பத்திரிகையை 1913 ஆம் ஆண்டு ஆரம்பித்தார். 1914 ஆம் ஆண்டில் சென்னையில் இருந்து நியூ இந்தியா என்ற பெயரில் நாளேடு ஒன்றை ஆரம்பித்து நடத்தினார்.
சரோஜினி நாயுடு :
இவர் ஒரு பிரபலமான சிறு முது அறிஞர் , கவிஞர் , எழுத்தாளர் , சுதந்திரப் போராளி மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். இந்திய சுதந்திர போராட்டத்தில் மகாத்மா காந்தியுடன் இணைந்து தண்டி யாத்திரையில் ஈடுபட்டார் சரோஜினி நாயுடு. இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் இவர் தான்.
ருக்மணி லட்சுமிபதி :
இந்திய சுதந்திரப் போராட்ட வீராங்கனை மற்றும் இந்திய தேசிய காங்கிரஸை சேர்ந்த அரசியல்வாதி 1, 930 வேதாரண்யத்தில் நடந்த உப்பு சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டதற்காக ஓராண்டு சிறையிலடைக்கப்பட்டார். இவர் சென்னை மாகாண சட்டமன்றத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் உறுப்பினர் மற்றும் சென்னை மாகாணத்தின் முதல் பெண் அமைச்சர் ஆவார்.
கஸ்தூரிபாய் காந்தி :
மோகனதாஸ் கரம்சந்த் காந்தியின் வாழ்க்கைத் துணைவியார் கணவர் ஏற்ற தேசிய வீரத்திற்கு தானும் உடன் உழைத்தவர். காந்தியுடன் சேர்ந்து தென்னாப்பிரிக்காவில் கறுப்பர்களின் மீதான இனவெறிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்.வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட காந்தியுடன் கஸ்தூரிபாய் காந்தியின் கைதானார். காந்திஜி கைதான நேரங்களில் அறப் போராட்டங்களை தலைமை தாங்கி நடத்திய பெருமை இவருக்கு உண்டு.
மீரா பெண் :
ஆங்கில பெண்மணி இந்தியாவில் தங்கியிருந்த போது மகாத்மா காந்தியின் உதவியாளராக பணிபுரிந்தார். மீரா பெண் தன் 33-வது வயதில் காந்தியின் சபர்மதி ஆசிரமம் வாழ்க்கையில் முழுமூச்சுடன் ஈடுபட்டார். வார்தா ஆசிரமத்தில் தங்கினார். கிருஷ்ண பக்தையான இவருக்கு மகாத்மா காந்தி வழங்கிய பட்டம் மீராபாய்.