Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMK கூட்டணில இருக்கோம்… 2024 எப்படி இருக்கும்னு தெரில ?… கைவிரித்த அண்ணாமலை…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தோடு நம்முடைய கூட்டணி தொடர்ந்து கொண்டிருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒன்னா இருக்கின்றோம். இதுல வந்து எந்த பிரச்சனையும் கிடையாது. பிரதமர் வரும்போது அந்த கட்சியில் இருந்து வந்து பார்க்கிறாங்க. டெல்லி வாறாங்க. முன்னாள் ஜனாதிபதி பிரிவு உபசார நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார்கள்.  இதெல்லாம் நீங்க பார்த்து இருப்பீங்க.

அதே நேரத்தில் 2024 எப்படி இருக்கும் என தெரியாது. பாஜக மாநிலத் தலைவராய் என்னுடைய கருத்து, பாரதிய ஜனதா கட்சி ஒரு இடத்துல நிக்கணும்னு நான் விரும்புறேன். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து, தெரியாது. என் கட்சித் தலைவர் கிட்ட சொல்லுவேன். பார்லிமென்ட் போர்டுல சொல்லுவேன். கட்சி வளர்ந்து இருக்கு, கட்சி ஒரு இடத்துல நிக்கணும். கட்சிக்காக இவ்வளவு ஓட் சதவீதம் இருக்கு. இவ்வளவு வாக்குகள் இருக்கு.

எங்களுடைய தனிப்பட்ட கருத்தையும் சொல்லுவோம். கூட்டணி எப்படி வரும் ? எப்படி அமையும் ? எத்தனை சீட் கொடுப்பாங்க ?  எல்லாத்தையும் முடிவு பண்ண முடியுமா ? என  எங்களுடைய கட்சி தலைமை முடிவு பண்ணுவாங்க. என்னைப் பொருத்தவரை கூட்டணியில் இருக்கோம். கூட்டணியில் இருப்போம் என்பதற்காக எல்லாத்தையும்  ஏற்றுக்கொள்ள வேண்டாம் என் காங்கிரஸ் கூட சொன்னாங்க…  நாங்க திமுக கூட்டணியில் இருக்கின்றோம் என்பதற்க்காக எல்லாத்தையும் நாங்க ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என சொன்னார்கள்.

Categories

Tech |