Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்கள் அம்மா வளர்த்த சிங்கங்கள்…. எங்களிடம் நரிகள் வாலாட்ட முடியாது… திமுகவை எச்சரித்த ஓபிஎஸ் …!!

சிங்கத்தின் குகையில் வந்து சிறுநரிகள் வாலாட்ட முடியாது என திமுகவை துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சாடினார்.

சென்னை கலைவாணர் அரங்கில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்ற விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மக்களுக்கான நலத்திட்டங்களை அம்மா அவர்கள் அரசு இன்றைக்கு வெற்றிகரமாக நிறைவேற்றி வருகிறது என்பதற்கு சாட்சி தான் மாநில அரசு பெற்றுள்ள இத்தனை தேசிய அளவிலான விருதுகளும், பாராட்டுகளும். கடந்த 2011-ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை மாண்புமிகு அம்மா அவர்களது அரசு அனைத்து துறைகளிலும் ஏராளமான சரித்திர சாதனைகளை படைத்து, தமிழக மக்களுடைய பாராட்டுக்களை தொடர்ந்து பெற்று வருகிறது.

அம்மாவின் அரசு கோடிக்கணக்கான தமிழக மக்களை நம்பி கழகத் தொண்டர்களின் மீது நம்பிக்கை வைத்து, மக்களுடன் பயணித்து, மக்களுக்கான நலத்திட்டங்களை தீட்டுவதில் இந்தியாவிலேயே முன்னிலையில் உள்ளது என்பதை நாம் நன்றாகவே அறிவோம். தமிழக அரசு சாதனைகளை யெல்லாம் தமிழக மக்கள் பார்க்கிறார்கள், பாராட்டுகிறார்கள், மகிழ்ச்சியுடன் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எதிர்க்கட்சியினரும் இதைப் பார்க்கிறார்கள். ஆனால் பரிதவிக்கிறார்கள்.

 

மாண்புமிகு அம்மாவின் அரசுக்கு தினந்தோறும் மக்கள் செல்வாக்கு கூடுகிறது என்று மனம் பதைபதைக்கிறார்கள். அதனால் மனம் பொறுக்க முடியாமல் குமுறுகிறார்கள், குறை சொல்கிறார்கள், குற்றம் சொல்கிறார்கள் என குற்றம் சாட்டினார். இதையெல்லாம் புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்கள் வளர்த்த சிங்கங்கள் தான்… அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள். சிங்கத்தின் குகையில் வந்து சிறுநரிகள் வாலாட்ட முடியாது. தொடர்ந்து மூன்றாவது முறையும் நாங்கள் வெற்றி பெற்று முத்திரை பதிப்போம்,  வெற்றிக்கனியை பறிப்போம் என துணை முதல்வர் தெரிவித்தார்.

 

Categories

Tech |