Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்க இன்னும் சாகவில்லை…! ஆ ராசாவை அப்படியே விட்டுட்டு போக முடியாது… சீமான் செம சப்போர்ட் …!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நான் இந்து என இருந்தால் இந்த இழிவை சுமக்க வேண்டியது இருக்கின்றது என்று சொல்லியுள்ளதாகத்தான் ஆ.ராசா சொல்லியுள்ளார். ஆ.ராசாவை எதிர்த்துப் பேசும் பெருமக்களிடம் நான் கேட்கின்றேன்,

ஆ. ராசாவை திட்டுகின்ற பெருமக்களிடம் நான் கேட்கின்றேன். இந்திய நாட்டின் முதல் குடிமகன் ”சிட்டிசன் ஆஃப் இந்தியா” ராம்நாத் கோவிந்து நாட்டின் முதல் குடிமகனே  கோயில்குள்ள போக முடியல. கோயிலுக்கு முன்னாடி இருந்த மரத்துக்கு கீழே தீ வளர்த்து, யாகம் வளத்து சாமி கும்பிட்ட போற நிலைமை இருந்துச்சு.

அன்னைக்கு உங்க கோபம் எங்க புடுங்கிட்டு இருந்துச்சா? இந்த சேட்டை எல்லாம் வேறு எங்கேயாவது வச்சிக்கிடனும். ஆ. ராசா எதோ அனாதை மாதிரி பேசிகிட்டு இருக்கீங்க.  திமுக பேசாது, அது பேசாது. பெரியாருக்கு ஒரு பூ போடுவதோடு முடிஞ்சு போச்சு. இவ்வளவுதான் பெரியார் மண்ணு, பெரியார் கோட்பாடு எல்லாம் அவங்களுக்கு.ஆனா ரெட்டமலை சீனிவாசன், அயோத்திதாசரின் பேரன் இன்றும் இருக்கோம்,  சாகவில்லை. அதனால ஆ ராசாவை அப்படியே விட்டுட்டு போக முடியாது என ஆ.ராசாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

Categories

Tech |