செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, காவிரி கரையோரத்தில் இருக்கக்கூடிய வீடுகளில் நீர் உள்ளே வந்த காரணத்தினால் மின்வினியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த நீர் வடிந்தால் தான் அந்த பகுதிகளில் மீதம் இருக்கக்கூடிய மின் மாற்றிகளுக்கு மின் வினியோகம் சீராக வழங்க முடியும்.
தண்ணீர் வரத்து அதிகமாக இருந்ததால் எந்த விதமான உயிரிழப்பும் வந்துவிட கூடாது, பாதிப்பும் வந்துவிட கூடாது தண்ணீர் வரத்து அதிகமாக இருந்தால் அதை ஒட்டி இருக்கக்கூடிய பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தி வைக்கக்கூடிய சூழல் தான் ஏற்படும்.
உயிரிழப்பு என்பது பதற்றமாக சொல்லிட வேண்டாம்; அது வேற மாதிரி மாற்றிவிடும். நாம் எடுக்கக்கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தான், வீடுகளில் பொருத்தக்கூடிய மீட்டர் வரைக்கும் தான் மின்சார வாரியம் பொறுப்பு எடுத்துக் கொள்ள முடியும்; அதற்குள் இருக்கக்கூடிய வீடுகளுக்குள் இருக்கக்கூடிய வயரிங் செய்யக்கூடிய பணிகள் எல்லாம் வீட்டினுடைய உரிமையாளரோ,
ஆதன் கட்டுமானதுடைய உரிமையாளர் பொறுப்பு. வீட்டிற்குள் டிவி போடும்போது, அங்க இருக்கக்கூடிய வயரிங்கில் சுவிட்சை தொடும் போதோ ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டு விட்டால், மின்கசிவால் உயிரிழப்புகள் – பாதிப்புகள் என நீங்கள் செய்தி போடுவீர்கள், அப்போ ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது மின்சார வாரியத்தின் உடைய சரியான நடவடிக்கை இல்லாத காரணத்தினால் தான் அந்த பாதிப்புகள் ஏற்பட்டுவிட்டது;
உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும் சில செய்திகள் வருகிறது. அதன் பிறகு ஒட்டுமொத்தமாக இவ்வளவு பேர் இழந்து உள்ளார்கள் என்று… மீட்டர் வரைக்கும் நாம் பொறுப்பேற்றுக் கொள்ள முடியும், மீட்டர் வரைக்கும் ஏதாவது மின் கசிவு ஏற்பட்டாலோ,
பாதிப்புகள் ஏற்பட்டாலோ வாரியத்தினுடைய பொறுப்பாக முடியும், வீடுகளுக்குள் இருக்கக்கூடிய அவர்கள் செய்யக்கூடிய பணிகளில் பாதிப்பு ஏற்பட்டால் அந்த நிறுவனங்கள், அந்த உரிமையாளர்களிடம் பொறுப்பு எடுத்துக்க முடியும். நாம் அதில் பணிகள் செய்ய முடியாது. அதனால் அதை ஒப்பிட்டு பார்த்து சொல்கிறேன். செய்திகள் போடும்போது எதனால் அந்த பாதிப்பு ஏற்பட்டது; எதனால் அந்த விபத்து ஏற்பட்டது என்பதை பார்த்துவிட்டு அந்த செய்திகள் போட வேண்டும் என தெரிவித்தார்.