நாங்கள் மக்களின் ஏஜெண்டுகள் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் பெருமிதத்தோடு தெரிவித்துள்ளார்.
திராவிடர் கழக 75ஆம் ஆண்டு பவள விழா சேலத்தில் நடைபெற்றது. இதில் திராவிட கழகத் தலைவர் கீ.வீரமணி , திமுக தலைவர் முக.ஸ்டாலின் , மக்களவை உறுப்பினர் திருமாவளவன் என பல்வேறு அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர்.பின்னர் பேசிய ஸ்டாலின் கூறுகையில் , எல்லா இயக்கத்துக்கும் பொதுவானவர் தந்தை பெரியார். அதனால் தான் அவரை யாராலும் தடுக்க முடியவில்லை. திராவிட இயக்கம் என்பது முன்பை விட இப்போது வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது.திராவிட இயக்கம் எப்போது உருவானதோ அப்போதே இருந்தே அதை களங்கப்படுத்த கூடிய முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது.
நம்மைப் பார்த்து தேசவிரோதிகள் என்று கொக்கரித்துக் கொண்டிருக்கிறார்கள். நம்மை பிரிவினைவாதிகள் என்று சொல்லிக்கொண்டு அவர்கள் தான் நாட்டை பிரிக்கிறார்கள் , மாவட்டத்தை பிரிக்கிறார்கள். நாங்கள் எப்போதும் ஜனநாயகத்தின் ஏஜெண்டுகள். மக்களின் ஏஜெண்டுகள் , ஜனநாயகத்திற்கு எங்கே ஆபத்து இருந்தாலும் அதை தட்டிக் கேட்போம். எப்படிப்பட்ட அடக்குமுறைகள் , என்ன கொடுமைகள் வந்தாலும் அதை எல்லாம் ஏற்றுக்கொண்டு , தாங்கிக் கொண்டு அதை முறியடிப்போம் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் பேசினார்.