செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜு மக்கள் நீதி மய்யம் தலைவரை கடுமையாக சாடியுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 2021 மே மாதம் நடக்க இருக்கும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தங்களுடைய பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் கோவில்பட்டி அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது “எனது சொத்து கணக்கு பற்றிய வெள்ளை அறிக்கை வெளியிட நான் தயாராக இருக்கிறேன். ஆனால் கமல் தயாராக இருக்கிறாரா ?” என்று கூறியுள்ளார். மேலும் மனசாட்சிப்படி கமல் தன்னுடைய ஊதியம் பற்றி கூறட்டும். நாங்களும் சொத்துக்கணக்கை செல்ல தயாராக இருக்கிறோம் என்றும் கூறியுள்ளார்.
இதையடுத்து எம்ஜிஆரை பற்றி பேச சீமான் போன்றவர்களுக்கு எந்த அருகதையும் இல்லை என்று கூறிய அமைச்சர், தரத்தோடு பேசுபவர்களுக்கு மட்டும்தான் பதில் சொல்ல முடியும் என்று கூறியுள்ளார். மேலும் பிரச்சினை செய்வதற்காக வாய்க்கு வந்தபடி பேசுபவர்களுக்கு எங்களால் பதில் சொல்ல முடியாது. அது முறையாக இருக்காது என்று தெரிவித்துள்ளார். அதேசமயம் எம்ஜிஆர் ஆட்சியை கொடுப்போம் என்று கூறிய கமல் மற்றும் ரஜினிக்கு கண்டனம் தெரிவித்த சீமான் எம்ஜிஆர் என்ன நல்லாட்சியை தந்தார்? என்று கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.