திமுகவை எதிர்த்து பாஜக மட்டுமே கேட்கிறது என தமிழக பாஜக தலைவர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சி சார்பில் நேற்று வேல் யாத்திரை நடைபெற்றது. இதற்க்கு அனுமதி மறுத்த தமிழக காவல்துறை, திருத்தணி வரை மட்டும் செல்ல விட்டு பாஜகவினரை கைது செய்தது. இதில் திருத்தணியில் பேசிய தமிழக பாஜக தலைவர் எல். முருகன், நாம் தமிழர்கள், தமிழ் இந்துக்கள், முருக பக்தர்கள், கந்தனை, கடம்பனை, கதிர்வேலை, சுப்பிரமணியனை, முருகனை, கார்த்திகேயனை வணங்கும் வீர முருக பக்தர்கள். சூரபத்மனை அழித்து முருகன் வெற்றிவேலனாக இந்த இடம். இந்த திருத்தணி முருகனின் மனதிற்கு பிடித்த இடம். முருகன் என்றாலே வீரம். ஹிந்துக்கள் நாம் எல்லோரும் வீரர்கள்.
நம் மதத்தை மதி கண்டபடி பேசும்போது நம்மலால நிச்சயமாக சும்மா இருக்க முடியாது.திமுகவும் அதனுடைய கூட்டணி கட்சிகளும் ஏற்கனவே பல்வேறு விதத்தில் ஆரம்ப காலம் முதலே இந்து கடவுள், தமிழ் கடவுள்களுக்கு எதிராகத் தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு நேற்றைக்கு அல்ல, இது எப்பவுமே இது நடந்துக்கிட்டு இருக்கு. திமுகவுக்கு இது ஒன்னு தான் வேலைதான். நம்முடைய மத உணர்வை கேலி செய்வதும், ஏளனம் செய்வது தான் திமுகவின் ஒரே ஒரு வேலையாக இருக்கிறது.
நாம யாரை கும்பிட்டால் அவங்களுக்கு என்ன ? என்னுடைய குலதெய்வம் நான் கும்பிடுவேன். என்னுடைய உரிமை, இதை தடுப்பதற்கு திமுகவுக்கும், அவர்களுடைய எதிர்க்கட்சிகள் சார்ந்த கூட்டணி கட்சிகளுக்கு எந்த யோக்கியதையும், எந்த அருகதையும் கிடையாது. நம்முடைய முருகக் கடவுளை கோடான கோடி தமிழ் மக்கள் உலகம் முழுவதும் இருந்து முருகப்பெருமானை வழிபடுகின்றனர். அப்படி முருகப்பெருமானை துதி பாடும் கந்த சஷ்டி கவசத்தை ஒரு கயவர் கூட்டம், கருப்பர் கூட்டம் அசிங்கப் படுத்தினார்கள், ஆபாசமாக சித்தரித்தார்கள்.
அந்த கந்த சஷ்டி கவசத்தை தவறாக சித்தரித்த அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதன்முதலில் குரல் கொடுத்தது பாரதிய ஜனதா கட்சி தான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அந்த கருப்பர் கூட்டம் கைது செய்யப்பட்டார்கள். கறுப்பர் கூட்டத்தினரை தேச விரோத சட்டத்தின் கீழ் கைது செய்யட்ட வேண்டும் என்று சொன்னோம். இன்னைக்கு வரைக்கும் அந்த சட்டம் அவர்கள் மீது பதிவு செய்யப்படவில்லை. கறுப்பர் கூட்டத்தில் உள்ளவர் திமுகவின் உடைய ஐடி விங்கில் செய்தாரா இல்லையா ? வேலை செய்தார் என்று நாம் சொல்கிறோம்.
நீங்க வேலை செய்யலைன்னு ஏன் சொல்லல ? அப்போது திமுக கருப்பர் கூட்டத்திற்கு பின்னால இருந்து அவர்களை இயக்குகின்றது.அவர்களுக்கு சட்ட உதவி செஞ்சிருக்காங்க. இது மட்டும் கிடையாது, நவராத்திரி விழா நம்முடைய தாய்மார்கள், நம்முடைய சகோதரிகள், கடுமையாக விரதமிருந்து அம்மனை வழிபடுகின்றனர். திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கூட்டணி கட்சித் தலைவர் நம்முடைய இந்தியாவில் இருக்கக்கூடிய தாய்மார்கள், சகோதரிகளை கேவலப்படுத்தி பேசினார். அத ஸ்டாலின் வக்காலத்து வாங்குக்கிறார். திமுக நம்ம கடவுளுக்கு எதிராகவும் பேசுவாங்க, எதிராக பேசுபவர்களுக்கு சப்போர்ட்டும் பண்ணுவாங்க.
அதே நேரத்தில் நம்முடைய தாய்மாருக்கு எதிராக பேசுவாங்க அவங்களையும் திராவிட முன்னேற்றக் கழகம் சப்போர்ட் பண்ணுவாங்க. பட்டியல் இன மக்களையும் அவங்க பேசுவாங்க…. நாங்க சமூகநீதி காவலர்கள் என்று சொல்வார்கள். ஹைகோர்ட் நீதிபதிக்கு இடஒதுக்கீடு கிடையாது. கஷ்டப்பட்டு படிச்சு நீதிபதியாக வந்து இருப்பாங்க. ஆனா இது திராவிட முன்னேற்றக் கழகம் போட்ட பிச்சை அப்படின்னு சொன்னாங்க. இதையெல்லாம் எதிர்த்து யாரும் கேள்வி கேட்க பாரதிய ஜனதா கட்சி மட்டும் தான் சட்டப்படியான நடவடிக்கை எடுத்தோம். நாம் அவர்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுத்தோம். அவங்க பாராளுமன்ற உறுப்பினர்கள் மேல வழக்கு தொடுத்தது தொடுப்பதற்கு காரணம் பாரதிய ஜனதா கட்சி என பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.