முன்னாள் அதிமுக M.L.A மார்கண்டேயன்” நாங்கள் தான் அதிமுக OPS சுயேச்சை “என்று கூறி அதிமுக_வின் செய்தி தொடர்பாளர் பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார் .
தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகின்றது . அதிமுக கூட்டணியில் பாஜக , தேமுதிக , பாமக , புதிய நீதி கட்சி , புதிய தமிழகம் கட்சி மற்றும் தமாக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளது . இதில் அதிமுக 20 பாராளுமன்ற தொகுதியில் அதிமுக_வும் , 20 தொகுதியில் கூட்டணி கட்சிகளும் போட்டியிடுகின்றது . கட்சிகளும் வேட்பாளாரை அறிவித்துள்ளனர் .
இந்நிலையில் அதிமுக_வும் தாங்கள் போட்டியிடும் பாராளுமன்ற மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவித்துள்ளனர் . நேற்று முன்தினம் சில சலசலப்புக்கிடையே நீண்ட ஆலோசனைக்கு பின் செய்தியாளர்கள் சந்திப்பின்றி இரவு 10 மணிக்கு வெளியாகியது. இதையடுத்து அதிமுக_வின் உட்கட்சி பூசல் வெளியே வந்துள்ளது .
இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்காததால் அதிருப்தியடைந்த அதிமுக_வின் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் திமுக தலைவர் முக.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு தெரிவித்து பிஜேபி_யின் அடிமைகள் என்று OPS_யையும் , EPS_யையும் கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில் தற்போது அதிமுக_வின் முன்னாள் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் கடும் அதிருப்தியடைந்து விமர்சனம் முன்வைத்து வெளியேறியுள்ளார்.
அதிமுக_வின் செய்திதொடர்பாளராக இருந்த விளாத்திகுளம் முன்னாள் M.L.A மார்கண்டேயன் தன்னுடைய செய்தி தொடர்பாளர் பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார். அப்போது அவர் கடம்பூர் ராஜீ அதிமுக_வை அழிக்க இருக்கின்றார். ஓ. பன்னீர்செல்வம் அவரது மகனுக்கு M.P சீட் வாங்கியுள்ளார் . இனிமேல் OPS தலைமையில் இந்த கட்சியில் இருக்க முடியாது . அதிமுக_வே நாங்கள் தான் OPS_தான் சுயேச்சை என்று கடுமையாக சாடினார்.