திமுக கட்சி தொண்டர்களிடம் பேசிய கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி,கலைஞர் அவர்கள் மறைந்ததற்கு பின்னால் இன்றைக்கு தளபதியினுடைய தலைமையேற்று திராவிட முன்னேற்றக் கழகம் பவள விழாவை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. இதை நான் சொல்வதற்கு காரணம், எங்களை குடும்ப கட்சி, குடும்ப கட்சி என்று சொன்னவர்கள் குடுமியை பிடித்துக் கொண்டு கோர்ட்டிலே போய் நிற்கிறார்கள்.
இதுதான் அவர்களுடைய நிலைமை. திராவிட கழகத்தை அண்ணா அதற்காகத்தான் அண்ணன், தம்பி என்ற பாசத்தோடு வளர்த்தார். அதனால்தான் இந்த இயக்கம் எவராலும் அழிக்க முடியவில்லை. எத்தனையோ பேர் புறப்பட்டு வந்தார்கள். திமுகவை சும்மா விடமாட்டேன் என கூறிய பண்டித ஜவகர்லால் நேரு மகளையே ஆட்சியில் திமுக தான் உக்கார வைத்தது என்றால், இது வரலாற்றில் எவ்வளவு பெரிய மாற்றம்.
நம்மை அழிக்க நினைத்தவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள் என்பதை நான் பட்டியலிட்டு காட்ட விரும்பவில்லை. பெருந்தலைவர் காமராஜர் திமுக காரனுடைய கட்டை விரலை வெட்டுவேன் என்றார். அவருக்கு கல்லறை கட்டியதை நாம்தாம். இன்று வரை காங்கிரஸ்காரர்கள் உட்பட அனைவரும் பூஜித்து கொண்டிருப்பது நாம கட்டண இடத்துல தான். எந்த காங்கிரஸ்காரனும் போகல என பேசிக்கொண்டு இருக்கும் போதே மன்னிக்கணும், நான் வரலாற்றை சொல்கிறேனே தவிர யாரையும் புண்படுத்துவதற்காக அல்ல என விளக்கினார்.