மக்கள் அச்சமின்றி வாக்களிக்க கையில் துப்பாக்கி ஏந்தியவாறு துணை ராணுவ வீரர்கள் அணி வகுப்பு நடத்தினர்.
மக்களவை தேர்தல் ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி மே 19 வரை ஏழு கட்டமாக நடத்தைப் பெறுவதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது . மேலும் தமிழகத்துக்கு இரண்டாம் கட்ட தேர்தலில் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . இந்நிலையில் தமிழகத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் பல்வேறு கட்ட முயற்சிகளை எடுத்து வருகின்றது .இதையடுத்து பொது மக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக துணை ராணுவத்தினர் அணிவகுப்பு நடத்தி வருகின்றனர் .
இந்நிலையில் இன்று காலை சென்னை ராயபேட்டையில் சாலையில் துணை ராணுவ படையினர் கையில் துப்பாக்கி ஏந்தியவாறு அணிவகுப்பு நடத்தினர். போலீஸ் பூத்தில் இருந்து தொடங்கிய இந்த அணிவகுப்பு பதற்றமான வாக்குச்சாவடிகளில் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் துணை ராணுவத்தினர் கையில் துப்பாக்கி ஏந்தி செல்வதை பார்க்கும்போது துணை இராணுவத்தின் பாதுகாப்பு நீங்கள் இருக்கிறீர்கள் யாரும் அச்சமும் கொள்ள வேண்டாம் தேர்தல் நாளன்று நீங்கள் தைரியமாகவும் அச்சமின்றியும் வாக்களிக்க வாக்குச்சாவடி மையத்திற்கு வரவேண்டும் என்று வெளிப்படுத்தும் வகையில் இந்த அணிவகுப்பு அமைத்தது.