இலவச wifi சேவையை கூகுள் நிறுத்தினாலும் நாங்கள் நிறுத்த மாட்டோம் என ரயில் டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது பொதுமக்கள் மத்தியில் இணைய சேவை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு பிரபல ஹோட்டல்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் என ஆங்காங்கே இலவச வைஃபை வசதிகள் பெருகி வருகின்றன. அந்த வகையில்,
இந்தியாவை பொறுத்தவரையில் ரயில் நிலையங்களில் கூகுள் நிறுவனம் சார்பில் இலவச வைஃபை வழங்கப்பட்டு வந்தது. அந்த சேவை தற்போது நிறுத்தப்பட உள்ளதாக கூகுள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்களின் இணையசேவை முக்கியத்துவத்தை உணர்ந்த ரயில் டெல் நிறுவனம் கூகிள் இலவச wifi அளிப்பதில் பின் வாங்கினாலும், நாங்கள் தொடர்ந்து இலவசமாக வழங்குவோம் என்று தெரிவித்துள்ளது. இவர்களது இந்த செய்தி குறிப்பு இந்திய மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.