Categories
தேசிய செய்திகள்

‘அரசு பிரச்னைகளை உருவாக்கக்கூடாது’ – கபில் சிபல் ட்வீட்..!!

ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை வெடித்ததையடுத்து அரசு பிரச்னைகளை அடையாளம் காணவேண்டுமே ஒழிய பிரச்னைகளை உருவாக்கக்கூடாது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் கபில் சிபல் கருத்து தெரிவித்துள்ளார்.

ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீவீரமான போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். நேற்று பல்கலைக் கழக வளாகத்தின் வெளியே நடைபெற்ற போராட்டத்தின் போது, காவலர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக இருபுறம் இருந்து கல்லெறித்தாக்குதல் நடைபெற்றது. இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவரான கபில் சிபல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். அதில், “மதிப்புகள் அழிக்கப்படுவதை காணும் சாட்சிகள் நாங்கள். அழிவுக்கான விதைகள் விதைக்கப்பட்டு வருகின்றன. தற்போது, அரசாங்கம் பிரச்னைகளை அடையாளம் காணவேண்டுமே தவிர, பிரச்னைகளை உருவாக்கக் கூடாது” என்று தெரிவித்துள்ளார். நேற்று நடந்த வன்முறை சம்பவத்திற்கு பிறகு கபில் சிபல் இவ்வாறு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |