கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் இந்தியாவே முடங்கியுள்ளது. இதனால் அனைத்து மொழி படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக வீட்டில் முடங்கி கிடக்கும் பிரபலங்கள் தங்களது அன்றாட ஏதாவது ஒன்றை செய்து ரசிகர்களுக்கும், நெட்டிசன்களுக்கும் அறிவிக்கும் விதமாக தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில் நடிகை நிதி அகர்வால், வீட்டில் இருக்கும் நேரத்தில் சமையல் செய்யும் வேலையில் மும்முரமாக இறங்கியுள்ளார். அந்த வகையில், தான் முதல் முறையாகத் கேக் செய்ததாகவும், அது மிகவும் சுவையாக இருந்தது என்றும் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “முதல் முறையாக நான் கேக் செய்தேன். இதில் சர்க்கரைக்குப் பதிலாக, மேப்பிள் சிரப் பயன்படுத்தப்பட்டுள்ளது. முதல் முறையாக செய்த சாக்லேட் கேக் அருமையாக வந்திருந்ததால் 2ஆவது முறை ஆரஞ்சு கேக் செய்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
நிதி அகர்வால் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ள, ‘பூமி’ திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Baked a cake for the first time
1.Check the batter, as we used maple syrup instead of sugar.
2.Wait for light bulbs to cook the cake.
3.Coco powder seasoning.
4.Satisfaction.
we baked the second one too.with orange.let’s see how that tastes 😝 #stayhome #stayhome #quarantine pic.twitter.com/xdr5FQ6ZO3— Nidhhi Agerwal (@AgerwalNidhhi) March 31, 2020